/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
எஸ். ஆர் பணியில் ஈடுபடும் விஏஓக்களால் தவிக்கும் விவசாயிகள்...: பயிர் காப்பீட்டுக்கான அடங்கல் பெறுவதில் சிரமம்.
/
எஸ். ஆர் பணியில் ஈடுபடும் விஏஓக்களால் தவிக்கும் விவசாயிகள்...: பயிர் காப்பீட்டுக்கான அடங்கல் பெறுவதில் சிரமம்.
எஸ். ஆர் பணியில் ஈடுபடும் விஏஓக்களால் தவிக்கும் விவசாயிகள்...: பயிர் காப்பீட்டுக்கான அடங்கல் பெறுவதில் சிரமம்.
எஸ். ஆர் பணியில் ஈடுபடும் விஏஓக்களால் தவிக்கும் விவசாயிகள்...: பயிர் காப்பீட்டுக்கான அடங்கல் பெறுவதில் சிரமம்.
ADDED : நவ 11, 2025 03:40 AM

சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரை தாலுகாவிற்குட்பட்ட பகுதியில் வைகை கால்வாயில் இருந்து 80, இளையான்குடி தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில் 30 கண்மாய்களும் பாசன வசதி பெற்று வருகின்றன.
கடந்த மாதம் இப்பகுதியில் பெய்த மழையை நம்பி ஆயிரக்கணக்கான எக்டேர் பரப்பளவில் விவசாயிகள் நெல் விவசாயம் செய்து வருகிற நிலையில் தொடர்ந்து போதுமான மழை இல்லாத காரணத்தினால் ஆங்காங்கே நெற்பயிர்கள் கருகி வருகிற நிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு வைகை ஆற்றில் சிவகங்கை மாவட்ட பாசன பகுதிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இந்த தண்ணீரும் 2 தாலுகாவிற்குட்பட்ட பகுதிகளில் உள்ள பெரும்பாலான கண்மாய்களுக்கு வந்து சேராத காரணத்தினால் விவசாயிகள் தண்ணீரின்றி என்ன செய்வதென்று தெரியாமல் மிகுந்த கவலையில் உள்ளனர்.
மானாமதுரை அருகே மிளகனூர், சீனிமடை, கஞ்சிமடை, நாராயண தேவன்பட்டி, ராமனேந்தல் ஆகிய 5 கிராமங்களுக்கும் வைகை ஆற்றிலிருந்து தண்ணீர் வராத காரணத்தினால் மேற்கண்ட கிராம பகுதிகளில் நெற்பயிர்கள் கருகி வருவதாக கூறி கடந்த நவ. 6ம் தேதி மதுரை - ராமேஸ்வரம் நான்கு வழிச்சாலையில் சாலை மறியல் செய்ய முயற்சித்தனர்.
இதேபோன்று மானாமதுரை தாலுகாவிற்குட்பட்ட ஏராளமான கிராமங்களுக்கும், இளையான்குடி தாலுகாவில் 4 கண்மாய்களுக்கு மட்டுமே வைகை தண்ணீர் சிறிதளவு வந்த நிலையில் பெரும்பாலான கிராமங்களில் விவசாயிகள் தண்ணீர் இல்லாமல் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் 2 தாலுகாவிற்குட்பட்ட பகுதிகளிலும் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து வருகிற நிலையில் அதற்காக நவ.15 கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது எஸ்.ஐ.ஆர் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணியில் வி.ஏ.ஓ.,க்கள், கிராம உதவியாளர்கள் ஈடுபட்டுள்ளதால் அவர்களிடம் அடங்கல் சான்றிதழ் வாங்க முடியாமல் பயிர் காப்பீடு செய்ய முடியாமலும் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகிற நிலையில் பயிர் காப்பீடு செய்வதற்கான கடைசி தேதியை நீட்டிப்பு செய்ய வேண்டும்.
அதே போன்று வைகை ஆற்றில் சிவகங்கை மாவட்ட பாசன பகுதிக்கு மீண்டும் உரிய அளவு தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று விவசாயிகள் அரசுக்கு வேண்டுகோள் விடுக்கின்றனர்.
இது குறித்து நீர்வளத் துறை அதிகாரி கூறியதாவது, மானாமதுரை, இளையான்குடி தாலுகாவிற்குட்பட்ட பகுதிகளில் உள்ள கண்மாய்களுக்கு வைகை தண்ணீர் சென்றடையாதது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளோம் என்றனர்.

