ADDED : நவ 11, 2025 03:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் சிவகங்கையில் நேற்று நடந்தது. தாசில்தார் அலுவலகம் முன் நடந்த ஊர்வலத்தை கலெக்டர் பொற்கொடி துவக்கி வைத்தார்.
ஊர்வலம் பல்வேறு வீதிகள் வழியாக சென்று பஸ் ஸ்டாண்டில் நிறைவு பெற்றது. அங்கு மக்களுக்கு சிறப்பு தீவிர திருத்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, ஓட்டுச்சாவடி அலுவலரிடம் வழங்குவது குறித்து விழிப்புணர்வு அளித்தனர்.
ஊர்வலத்தில் அரசு மகளிர் கல்லுாரி மாணவிகள் பங்கேற்றனர். சிவகங்கை கோட்டாட்சியர் ஜெபி கிரேசியா, தாசில்தார் மல்லிகார்ஜூனா உட்பட பலர் பங்கேற்றனர்.

