sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

அரசு மருத்துவமனையில் டாக்டர், நர்சுகள் பற்றாக்குறை திருப்புவனத்தில் நோயாளிகள் தவிப்பு

/

அரசு மருத்துவமனையில் டாக்டர், நர்சுகள் பற்றாக்குறை திருப்புவனத்தில் நோயாளிகள் தவிப்பு

அரசு மருத்துவமனையில் டாக்டர், நர்சுகள் பற்றாக்குறை திருப்புவனத்தில் நோயாளிகள் தவிப்பு

அரசு மருத்துவமனையில் டாக்டர், நர்சுகள் பற்றாக்குறை திருப்புவனத்தில் நோயாளிகள் தவிப்பு


ADDED : நவ 11, 2025 03:38 AM

Google News

ADDED : நவ 11, 2025 03:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புவனம்: திருப்புவனம் அரசு மருத்துவமனையில் டாக்டர், நர்சுகள், சமையலர் பற்றாக்குறையால், சிகிச்சை அளிக்க டாக்டர்களின்றி இருக்கும் நர்சுகளே சிகிச்சை தரும் இடமாக இருப்பதால் நோயாளிகள் அச்சத்தில் தவிக்கின்றனர்.

திருப்புவனத்தில் அரசு சமுதாய நல மையம் கடந்த 2013ல் அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. ஆனால் தரம் உயர்த்தப்பட்டதற்கான எந்த வித ஆணையும் பிறப்பிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

எனவே இன்று வரை பெயர் பலகையில் மட்டும் அரசு மருத்துவமனை என உள்ள நிலையில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள வசதிகள் கூட இல்லை.

அரசு மருத்துவமனையில் 13 டாக்டர்கள், 30 நர்சுகள், 2 மருந்தாளுனர்கள், தூய்மை பணியாளர்கள், 2 காவலர்கள், சமையலர் என இருக்க வேண்டும். ஆனால் 6 டாக்டர்கள், 5 நர்சுகள், 1 மருந்தாளுனர் மட்டுமே உள்ளனர்.

காவலாளி இல்லாததால் மருத்துவமனை வளாகத்தை பலரும் வாகன நிறுத்துமிடமாக பயன்படுத்தி வருகின்றனர். சமையலர் பணியிடம் காலியாக இருப்பதால் நோயாளிகளுக்கு ஓட்டலில் இருந்து பார்சல் வாங்கி வழங்கப்படுகிறது.

திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு சுற்றுவட்டார 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்தும், நான்கு வழிச்சாலை விபத்து, அவசர சிகிச்சை உள்ளிட்டவற்றிற்கும் இங்குதான் சிகிச்சை அளிக்கப்படுகிறது. போதிய டாக்டர்கள் இல்லாத நிலையில், பணியில் இருக்கும் டாக்டர்களும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முன்வராததால் செவிலியர்களே சிகிச்சையளித்து வருகின்றனர்.

விபத்தில் சிக்கி காயமடைந்து யார் வந்தாலும், எவ்வளவு ஆபத்தான நிலையில் இருந்தாலும் செவிலியர்களே சிகிச்சையளித்து மதுரைக்கு பரிந்துரை செய்து விடுகின்றனர். பரிந்துரை மருத்துவ அறிக்கையில் கையெழுத்து மட்டும் டாக்டர்கள் இடுகின்றனர்.

மாவட்டத்தில் உள்ள தாலுகா தலைமை மருத்துவமனைகளிலேயே மாதத்திற்கு அதிகபட்சமாக திருப்புவனம் மருத்துவமனைக்கு 29 ஆயிரத்து 908 பேர் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர்.

குறைந்த பட்சமாக இளையான்குடி மருத்துவமனைக்கு 9 ஆயிரத்து 693 பேர் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு ராஜ்யசபா எம்.பி.,யான சிதம்பரம் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 63 லட்ச ரூபாய் செலவில் பிரேத பரிசோதனை கூட கட்டடம் கட்டப்பட உள்ளது.

அதிகளவில் பிரசவத்திற்கு பெண்கள் இங்கு வருவதால் குறைபிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளை பாதுகாக்க அவசர கால மகப்பேறு மருத்துவமனை கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.

திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு கட்டட வசதி செய்யப்பட்டு வந்தாலும் போதிய டாக்டர்கள், நர்சுகள், மருந்தாளுனர்கள் இல்லை. பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இது குறித்து மருத்துவமனை அலுவலர்கள் கூறியதாவது, கூடுதல் டாக்டர்கள், நர்சுகள், சமையலர் உள்ளிட்டோர் நியமிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து பணியிடங்களும் நிரப்படும் என்றனர்.

மருத்துவமனையில் கூடுதல் கட்டடங்கள் கட்டப்பட்டு வரும் நிலையில் டாக்டர்கள் பற்றாக்குறை காரணமாக அவற்றை திறப்பதற்குள் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

பற்றாக்குறை உள்ள நிலையில் கூடுதல் கட்டடங்களை திறந்தும் எந்த வித பயனும் இல்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் திருப்புவனம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு டாக்டர்கள் சிகிச்சையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us