/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காத்திருப்பு காரைக்குடி ஆதார் மையத்தில் குழந்தைகளுடன் தெளிவில்லாத அறிவிப்பால் மக்கள் குழப்பம்

ADDED : அக் 01, 2024 04:57 AM

காரைக்குடி: காரைக்குடி ஆதார் மையம் முன்பு பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுடன் அதிகாலை முதலே காத்துக் கிடக்கும் அவலம் நிலவுகிறது.
காரைக்குடியில் தாலுகா அலுவலகம் மற்றும் மாநகராட்சி அலுவலக வளாகங்களில் ஆதார் மையம் செயல்பட்டு வருகிறது. 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆதார் கார்டை புதுப்பிக்க வேண்டும் என்ற நிலை உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட ஆதார் கார்டுதாரர்களின் தற்போதைய உண்மை நிலை அறியும் பொருட்டும், பயோ மெட்ரிக்கில் உறுதி செய்யும் பொருட்டும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பள்ளி , கல்லுாரி தொடங்கி, வங்கி கணக்கு, டிரைவிங் லைசென்ஸ், ரேஷன் கார்டு, விவசாய பதிவு, அனைத்துக்கும் ஆதார் கார்டு அவசியமானதாக உள்ளது.
ஆனால் ஆதார் கார்டை புதுப்பிக்க கடைசி தேதி எது என்று இதுவரை முறையான அறிவிப்பும் வெளிவரவில்லை. அவ்வப்போது ஒரு அறிவிப்பு உள்ளதாக வதந்தி வருவதால் மக்கள் அலைகின்றனர். காரைக்குடி மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள ஆதார் மையத்தில் நேற்று அதிகாலை 6:00 மணி முதலே மக்கள் காத்துக் கிடந்தனர்.
சமூக ஆர்வலர்கள் கூறுகையில்:
ஆதார் கார்டு அத்தனைக்கும் தேவையான ஒன்றாக மாறிவிட்டது. ஆதார் புதுப்பிக்க கடைசி தேதி செப்.14 என்று அறிவிக்கப்பட்டது. இதனால், மக்கள் கூட்டம் கூட்டமாக ஆதார் மையங்களில் காத்துக் கிடந்தனர். பிறகு புதுப்பிப்பதற்கு அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. முறையான அறிவிப்பு இதுவரை அறிவிக்கப்படவில்லை. ஏழை மக்கள் உட்பட அனைவரும் தங்கள் வேலை, வருமானத்தை இழந்து ஒரு நாள் செலவழிக்க வேண்டிய உள்ளது என்றார்.