/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பெயர்ந்து விழுந்த கூரை அலறியடித்து ஓடிய மக்கள்
/
பெயர்ந்து விழுந்த கூரை அலறியடித்து ஓடிய மக்கள்
ADDED : செப் 13, 2025 11:36 PM

திருப்புவனம்: திருப்புவனம் நெல்முடிகரை துணை மின்நிலைய கூரை பெயர்ந்து விழுந்த தால் மின்கட்டணம் செலுத்த நின்றிருந்த மக்கள் அலறியடித்து ஓடினர்.
திருப்புவனம் நெல்முடி கரையில் துணை மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. மின்வாரிய அலுவலகத்தில் பத்திற்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். இணையதளம் மூலம் மின்கட்டணம் செலுத்தலாம் என்றாலும் கிராமப்புற மக்கள் மின்வாரிய அலுவலகம் வந்து மின்கட்டணம் செலுத்தி வருகின்றனர்.
இதுதவிர புதிய மின் இணைப்பு, மின் பழுது உள்ளிட்டவற்றிற்கும் நெல்முடிகரை அலு வலகத்திற்கு வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் மின் கட்டணம் செலுத்த மக்கள் வரிசையில் நின்ற போது கட்டடத்தின் கூரை பெயர்ந்து விழுந்தது. வரிசையில் நின்றிருந்த மக்கள் அலறியடித்து ஓடினர். கூரை பெயர்ந்து விழுந்ததில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
பொதுமக்கள் கூறுகை யில், நெல்முடிகரை துணை மின் நிலையம் 1989ல் கட்டப்பட்டது. இதுவரை கட்டடங்களை பராமரிக்கவே இல்லை. இதனால் கட்டடத்தின் பல இடங்களில் சேதமடைந்து மழை காலங்களில் தண்ணீர் கசிந்து வருகிறது. கூரை பெயர்ந்து விழுந்த நிலையில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. விபரீதம் ஏற்படும் முன் கட் டடத்தை பழுது பார்க்க வேண்டும், என்றனர்.