/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புவனம் ராமநாதபுரம் மாவட்டமா? அதிகாரிகளால் மக்கள் அதிர்ச்சி
/
திருப்புவனம் ராமநாதபுரம் மாவட்டமா? அதிகாரிகளால் மக்கள் அதிர்ச்சி
திருப்புவனம் ராமநாதபுரம் மாவட்டமா? அதிகாரிகளால் மக்கள் அதிர்ச்சி
திருப்புவனம் ராமநாதபுரம் மாவட்டமா? அதிகாரிகளால் மக்கள் அதிர்ச்சி
UPDATED : டிச 12, 2025 07:54 AM
ADDED : டிச 12, 2025 05:41 AM

திருப்புவனம்: திருப்புவனத்தில் ராமநாதபுரம் மாவட்டம் என பெயர்பலகை வைத்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
திருப்புவனம் போலீஸ் ஸ்டேஷன் எதிரே திருப்புவனம் உழவர் பணி கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. இதே போல தாலுகா முழுவதும் 12 கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. பொதுமக்கள் வசதிக்காக 12 கூட்டுறவு சங்கங்களிலும் இசேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது. இருப்பிடம், ஜாதி, வருவாய் உள்ளிட்ட 35 வகையான சான்று பெற விண்ணப்பிக்க முடியும்.
கூட்டுறவு சங்கங்களுக்கு வரும் விவசாயிகள், பெண்கள் உள்ளிட்டோருக்கு இது மிகவும் வசதியாக இருந்தது. தற்போது கூட்டுறவு சங்கங்களில் இசேவை மையத்திற்கு புதிய பெயர் பலகை பொருத்தப்பட்டு வருகிறது.
முதல்வர் ஸ்டாலின் படத்துடன் திருப்புவனம் உழவர் பணி கூட்டுறவு சங்க அலுவலக வாசலில் இசேவை மையத்திற்காக வைக்கப்பட்ட போர்டில் திருப்புவனம், ராமநாதபுரம் மாவட்டம் என குறிப்பிடப்பட்டுள்ளது. திருப்புவனம் உழவர் பணி கூட்டுறவு சங்கத்தின் கீழ் 30க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. தினசரி ஏராளமான அலுவலர்கள் வந்து செல்கின்றனர். ஒருவர் கூட போர்டில் ராமநாதபுரம் மாவட்டம் என தவறாக குறிப்பிடப்பட்டதை சுட்டி காட்டி தவறை திருத்த முயலவில்லை என்பது வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

