/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தேங்கிய நீரால் நோய் பரவும் அபாயம்
/
தேங்கிய நீரால் நோய் பரவும் அபாயம்
ADDED : டிச 12, 2025 05:40 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை: தேவகோட்டை ஒன்றியத்தில் சிவகங்கை தேவகோட்டை சாலையில் உள்ளது சருகணி. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பெய்த மழை நீர் மருதுபாண்டியர் நகரில் உள்ள ரோட்டில் கழிவு நீராக குட்டை போல் தேங்கி நிற்கிறது.
பேவர் பிளாக் ரோடு அமைத்திருந்தும் பயனில்லாமல் போய் விட்டது. ரோட்டின் ஒரு புறத்தில் நீண்ட துாரத்திற்கு மண்ணை கொட்டி வைத்து உள்ளனர். வேறு வழியின்றி மக்கள் சாக்கடையில் நடந்து தான் கடைகளுக்கு சென்று வருகிறார்கள். கழிவுநீர் தேங்கி இரண்டு மாதமாகி விட்டதால் கொசு உற்பத்தி மையமாகி விட்டது. ஒன்றிய அதிகாரிகள் உடனடியாக கழிவு நீரை வெளியேற்றி கொசு மருந்து அடிக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

