/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பிரேக் பிடிக்காத அரசு பஸ் கல் வைத்து நிறுத்திய மக்கள்
/
பிரேக் பிடிக்காத அரசு பஸ் கல் வைத்து நிறுத்திய மக்கள்
பிரேக் பிடிக்காத அரசு பஸ் கல் வைத்து நிறுத்திய மக்கள்
பிரேக் பிடிக்காத அரசு பஸ் கல் வைத்து நிறுத்திய மக்கள்
ADDED : டிச 26, 2024 06:16 AM

திருப்புவனம் : ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி கிளையை சேர்ந்த, டிஎன் 63 என் 1307 என்ற எண் அரசு டவுன் பஸ், பரமக்குடியில் இருந்து பார்த்திபனுார், மானாமதுரை வழியாக திருப்புவனம் வரை இயக்கப்படுகிறது.
இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் ஒரே ஒரு டவுன் பஸ் இது மட்டும் தான். நேற்று காலை 9:30 மணிக்கு திருப்புவனத்தில் இருந்து 20 பயணியருடன் கிளம்பிய பஸ், சற்று துாரம் சென்ற உடன் பஸ்சில் பிரேக் பிடிக்கவில்லை. இதையறிந்த பயணியர் சிலர், ஓடும் பஸ்சில் இருந்து குதித்தனர்.
பயணியரின் அலறலை கேட்டு, சாலையில் நடந்து சென்றவர்களும், பஸ்சில் இருந்து குதித்த கண்டக்டரும் இணைந்து, பஸ் டயரின் முன் கற்களை போட்டு நிறுத்தினர்.
பயணியர் கூறுகையில், 'இந்த பகுதியில் இயக்கப்படும் டவுன் பஸ்கள் ஹெட்லைட் எரியாதது, பிரேக் பிடிக்காதது என பல பிரச்னைகளுடன் தான் இயக்கப்படுகின்றன. டிரைவர், கண்டக்டர் புகார் செய்தாலும் பணிமனைகளில் கண்டு கொள்வதில்லை' என்றனர்.
கிளை மேலாளர் ரத்னம் கூறுகையில், ''பிரேக் ஜாம் ஆகி இறுகி கொண்டதால், பஸ் நிற்கவில்லை. சிறிது நேரம் கழித்து தானே சரியாகி பஸ்சை ஓட்டி வந்து விட்டனர்,'' என்றார்.