/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கை மாவட்டத்தில் தொடர் மின்வெட்டு பழுதாகும் மின் பொருட்களால் மக்கள் தவிப்பு
/
சிவகங்கை மாவட்டத்தில் தொடர் மின்வெட்டு பழுதாகும் மின் பொருட்களால் மக்கள் தவிப்பு
சிவகங்கை மாவட்டத்தில் தொடர் மின்வெட்டு பழுதாகும் மின் பொருட்களால் மக்கள் தவிப்பு
சிவகங்கை மாவட்டத்தில் தொடர் மின்வெட்டு பழுதாகும் மின் பொருட்களால் மக்கள் தவிப்பு
ADDED : ஏப் 22, 2025 06:10 AM
திருப்புவனம்: திருப்புவனம் பகுதியில்அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுவதால் மின்சாதன பொருட்கள் பழுதாகி வருவதாக பொதுமக்கள் புலம்புகின்றனர்.
திருப்புவனத்தில் 18 வார்டுகளில் எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. திருப்புவனம் துணை மின் நிலையம் மூலம் நகரில் வீடுகள்,கடைகள், தொழிற்சாலைகள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்டவற்றில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் உள்ளன. கோடை வெயில் என்பதால் வீடுகளில் மின்விசிறி, ஏசி உள்ளிட்டவை முழுவீச்சில் இயங்கி வருகின்றன.
மின்சாரம் சிறிது நேரம் துண்டிக்கப்பட்டால் கூட புழுக்கம் தாங்காமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். திருப்புவனத்தில் கடந்த சில நாட்களாக நாள் ஒன்றுக்கு பத்திற்கும் மேற்பட்ட முறை மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. வீடுகளில் பலரும் எல்.இ.டி, எல்.சி.டி., டி.வி.,க்கள், எல்.இ.டி., பல்புகள் உள்ளிட்டவைகளை பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும் வீடுகள் தோறும் அலைபேசிகள்,லேப்டாப்கள், கம்ப்யூட்டர்கள் உள்ளிட்டவற்றையும் பயன்படுத்துகின்றனர். தொடர்ந்து மின்சாரம் துண்டிப்பதால்இவைகள் அடிக்கடி பழுதாகி வருகின்றன.
இன்வெர்ட்டர்கள் உள்ளிட்டவற்றிலும் முழுமையாக சார்ஜ் செய்ய முடியவில்லை. அதிலும் காலை நேரத்தில் மின்சாரம் துண்டிக்கப்படுவதால் குடிநீர் மோட்டார் உள்ளிட்டவற்றை இயக்க முடிவதில்லை.
வீடுகளில் கணவன், மனைவி இருவருமே வேலைக்கு செல்வதால் காலையிலேயே சமையல் செய்து வெளியேறி விடுவார்கள், காலையில் மின்சாரம் துண்டிக்கப்படுவதால் சமையம் செய்யவே முடியவில்லை என புலம்புகின்றனர்.
இதனால் வேலைக்கு செல்வதும் தாமதம் ஆகி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மின்சாரம் துண்டிக்கப்பட்டு மீண்டும் இணைப்பு வழங்கும் போது அதிக வோல்ட் மின்திறனுடன் வருவதால் மின்னணுசாதன பொருட்கள் பழுதாகி வருகின்றன.
சில நாட்களாக அதிகரித்து வரும் மின் வெட்டு வரும் நாட்களில் அதிகரிக்கும் என தகவல் பரவி வருவதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். சிவகங்கை நகர் பகுதியில் நேற்று மதியம் 5 முறைக்கு மேல் மின் தடை ஏற்பட்டது.
எனவே மாவட்ட மின்வாரியம் தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.