/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மேலத்துறையூரில் அடிப்படை வசதியின்றி மக்கள் அவதி
/
மேலத்துறையூரில் அடிப்படை வசதியின்றி மக்கள் அவதி
ADDED : ஆக 11, 2025 03:50 AM

இளையான்குடி: இளையான்குடி அருகே மேலத்துறையூரில் அடிப்படை வசதிகளின்றி மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட மேலதுறையூர் ஊராட்சிக்குட்பட்ட செந்தமிழ் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டிகளில் தண்ணீர் இல்லாமலும், ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் அமைக்கப்பட்டுள்ள குழாய்களிலும் தண்ணீர் வராமல் இருப்பதினால் கிராம மக்கள் வண்டிகளில் வரும் சுகாதாரமற்ற குடிநீரை ஒரு குடம் ரூ. 15 கொடுத்து வாங்கி சிரமப்படுகின்றனர்.
மேலும் இப்பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் கிராம மக்கள் இரவில் அச்சப்பட்டு வருகிற நிலையில் மாணவர்களும் படிக்க முடியாமல் உள்ளனர்.
செந்தமிழ் நகர் பகுதியில் அமைந்துள்ள டிரான்ஸ்பார்மருக்கு அருகில் தண்ணீர் தேங்கி நிற்பதாலும் கருவேல மரங்கள் வளர்ந்திருப்பதாலும் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.