/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கண்மாய்களில் கோழிக் கழிவு துர்நாற்றத்தால் மக்கள் அவதி
/
கண்மாய்களில் கோழிக் கழிவு துர்நாற்றத்தால் மக்கள் அவதி
கண்மாய்களில் கோழிக் கழிவு துர்நாற்றத்தால் மக்கள் அவதி
கண்மாய்களில் கோழிக் கழிவு துர்நாற்றத்தால் மக்கள் அவதி
ADDED : ஆக 21, 2025 11:18 PM

காரைக்குடி: காரைக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், விவசாயத்தின் நீர் ஆதாரமான கண்மாய்களில் கோழி கழிவு கொட்டப்படுவதால் சுகாதாரக் கேடு நிலவுகிறது.
சாக்கோட்டை வட்டாரத்தில் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. பெரும்பாலும் மானாவாரி விவசாயமே நடைபெறும் இப்பகுதியில் கண்மாய் நீர் ஆதாரமாக உள்ளது.
இந்நிலையில் காரைக்குடி தேவகோட்டை ரஸ்தா உட்பட பல்வேறு பகுதிகளிலும் கோழிக் கழிவு கண்மாய் பகுதிகளில் கொட்டப்படுகிறது.
கண்மாய் மாசடைவதோடு துர்நாற்றம் வீசுவதால் சுகாதாரக் கேடு அபாயம் உள்ளது. பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.