/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரையில் குடிநீர் திட்ட சோதனை வீணாகும் தண்ணீரால் மக்கள் அவதி
/
மானாமதுரையில் குடிநீர் திட்ட சோதனை வீணாகும் தண்ணீரால் மக்கள் அவதி
மானாமதுரையில் குடிநீர் திட்ட சோதனை வீணாகும் தண்ணீரால் மக்கள் அவதி
மானாமதுரையில் குடிநீர் திட்ட சோதனை வீணாகும் தண்ணீரால் மக்கள் அவதி
ADDED : ஜூன் 02, 2025 12:34 AM

மானாமதுரை: மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் புதிய குடிநீர் திட்ட குழாய் சோதனையில் குடிநீர் வீணாக ரோட்டில் தேங்குவதால் மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
மானாமதுரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு 4500 க்கும் மேற்பட்ட குடிநீர் இணைப்புகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இதற்காக கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட குழாய்கள் அடிக்கடி சேதமடைவதால் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ரூ.39 கோடியில் புதிதாக குடிநீர் குழாய் பொருத்தும் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர்.
இதற்காக அனைத்து பகுதிகளிலும் புதிதாக குழாய்கள் பதிக்கப்பட்டு வீடுகள் தோறும் புதிய இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அன்பு, அண்ணாமலை நகர், சிவகங்கை ரோடு உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளுக்கு புதிய இணைப்புகள் வழங்கப்பட்ட நிலையில் குழாய்களில் தண்ணீர் சரியான முறையில் வருகிறதா என்பதை சோதனை செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. இப்பணியின் போது ஆங்காங்கே குழாய்களில் இருந்து தண்ணீர் வீணாக வெளியேறி ஆங்காங்கே தேங்கி கிடப்பதால் அப்பகுதி மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதனை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இது குறித்து குடிநீர் திட்ட ஒப்பந்ததாரர்கள் கூறியதாவது, ஒரு சில இடங்களில் சோதனை செய்யும்போது எதிர்பாராத விதமாக தண்ணீர் வீணாகி வருகிறது. அதனை உடனடியாக சரி செய்யும் நடவடிக்கை எடுக்கிறோம், என்றனர்.