/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஆற்றில் சிக்கியவர்கள் கயிறு கட்டி மீட்பு
/
ஆற்றில் சிக்கியவர்கள் கயிறு கட்டி மீட்பு
ADDED : டிச 15, 2024 07:43 AM

தேவகோட்டை : தேவகோட்டை தாலுகா கண்ணங்குடி ஒன்றியத்தைச் சேர்ந்த கே. சிறுவனுார் ஊராட்சியைச் சேர்ந்தது குருந்துார் கிராமம். இதன் வழியாக பாம்பாறு ஓடுகிறது.
கடும் மழை காரணமாக முதன் முறையாக தண்ணீர் வெள்ளமாக ஓடிக் கொண்டு இருக்கிறது. இந்த ஆற்றின் மறுபுறத்தில் கரையோரம் சில குடும்பத்தினர் வசிக்கின்றனர். அவர்கள் குடியிருப்பு முற்றிலும் தண்ணீரால் சூழப்பட்டு சிக்கிக் கொண்டனர். வயது குறைந்தவர்கள் நீந்தியும் கயிறு கட்டி வந்து விட்டனர். முதியவர்களை மீட்க முடியவில்லை. இது தொடர்பாக தேவகோட்டை தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து, தீயணைப்பு அலுவலர் கணேசன் தலைமையில் தீயணைப்பு மீட்பு படையினர் கயிறு கட்டி வெள்ளத்தில் சிக்கிய மீனாட்சி 90, காளியம்மாள் 80, துரைராஜ் 90, காளியம்மாள் 55, தனலட்சுமி 60, சூசை 85, வேதம் 65, பிச்சைமுத்து 70, லெட்சுமி 55 ஆகியோரை மீட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்தனர்.