sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

அறிவுப்பசியை மேம்படுத்தும் ‛'அறிவு களஞ்சியம்' சிவகங்கை புத்தக கண்காட்சிக்கு மக்கள் வரவேற்பு

/

அறிவுப்பசியை மேம்படுத்தும் ‛'அறிவு களஞ்சியம்' சிவகங்கை புத்தக கண்காட்சிக்கு மக்கள் வரவேற்பு

அறிவுப்பசியை மேம்படுத்தும் ‛'அறிவு களஞ்சியம்' சிவகங்கை புத்தக கண்காட்சிக்கு மக்கள் வரவேற்பு

அறிவுப்பசியை மேம்படுத்தும் ‛'அறிவு களஞ்சியம்' சிவகங்கை புத்தக கண்காட்சிக்கு மக்கள் வரவேற்பு


ADDED : ஜன 28, 2024 06:06 AM

Google News

ADDED : ஜன 28, 2024 06:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை, : அறிவு பசியை மேம்படுத்தி', வாசகர்களை அதிகரிக்க செய்யும் சீமையான சிவகங்கையில் பிப்., 6 வரை நடக்கும் புத்தக திருவிழா மற்றும் கண்காட்சியில் புத்தகங்கள் வாசகர்களின் 'அறிவு தேடலுக்கு' இரையாகி வருகிறது.சிவகங்கை மன்னர் மேல்நிலை பள்ளி வளாகத்தில் மாவட்ட நிர்வாகம், கல்வி, நுாலகம் துறையுடன் பபாசி இணைந்து 3ம் ஆண்டு புத்தக திருவிழா மற்றும் கண்காட்சி நேற்று துவங்கியுள்ளது. பிப்., 6 வரை தினமும் காலை 10:00 முதல் இரவு 10:00 மணி வரை கண்காட்சி திறந்திருக்கும்.

கலெக்டர் ஆஷா அஜித் தலைமையிலான அதிகாரிகள் தினமும் கண்காட்சி வளாகத்தில் மாணவர்களின் கலைநிகழ்ச்சி, பட்டிமன்றம், பாட்டு மன்றம், இலக்கிய சொற்பொழிவு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

புத்தகங்கள் இலவசம்


கண்காட்சி நுழைவு வாயிலில் வளர்ச்சித்துறையினர் சார்பில் கூப்பன் வழங்கப்படுகிறது. அதனை பூர்த்தி செய்து பெட்டியில் போட வேண்டும். தினமும் குலுக்கி எடுத்து, தலா ஒரு நபருக்கு ரூ.500 மதிப்பிலான புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது.

கண்காட்சிக்கு வரும் மாணவர்கள், குடும்ப தலைவர், தலைவிகள், வரலாற்று ஆர்வலர்களின் அறிவு பசியை பூர்த்தி செய்யும் விதமாக 110 ஸ்டால்களில் லட்சக்கணக்கான வரலாற்று, இலக்கியம் மட்டுமின்றி போட்டி தேர்வுக்கான ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., புத்தகங்கள், மருத்துவம், 'நீட்', 'டெட்' தேர்வுக்கான பொது அறிவு புத்தகங்கள் கண்காட்சியை அலங்கரிக்கின்றன. இங்கு ஒரு புத்தகத்தின் விலை ரூ.10 ல் இருந்து அதிகபட்சம் ரூ.1,000 வரை விற்கப்படுகிறது.

வாசகர்கள் கருத்து:

தமிழர் வரலாறு சொல்லும் 'கீழடி'


எஸ்.மகேஸ்வரி, மாணவி, அரசு உயர்நிலை பள்ளி, முடிகண்டம்: பள்ளியில் பாடப்புத்தகங்களை மட்டுமே படித்து வந்தோம். இப்புத்தக கண்காட்சி மூலம் பாடப்புத்தகம் அல்லாது, அறிவு சார்ந்து ஏராளமான புத்தகங்களை காண முடிகிறது. ஒவ்வொரு புத்தகத்தையும் வாங்கி படிக்க துாண்டுகிறது.

குறிப்பாக 'மகனுக்கு எழுதிய கடிதம்' என்ற புத்தகம் மூலம் பெற்றோரின் உணர்வை புரிந்து கொள்ள முடிகிறது. கீழடி அகழ்வாராய்ச்சி மூலம் பண்டைய தமிழர்களின் நாகரீக வரலாறு, வணிகம், வாழ்க்கை முறையை தத்ரூபமாக காணமுடிகிறது.

சாதனை பெண்ணாக உருவாக்கும்


கே.கோகுல ஹரிணி, கல்லுாரி மாணவி, சிவகங்கை: கல்லுாரியில் படிப்பதால் அதற்கு தேவையான, விரிவாக படிக்கும் விதத்தில் பாடப்புத்தகங்கள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. தினமலரின் தாமரை பிரதர்ஸ் மீடியா பி.லிட்., ஸ்டாலில் ஆசிரியர் ஜி.வி.,ரமேஷ்குமார் எழுதிய ஆட்சி தலைவிகள் என்ற புத்தகம் மூலம் பெண் கலெக்டர்களின் அருமை, பெருமை அறிந்து, அவர்களை போலவே சாதனை புரிய வேண்டும் என்ற ஆவலை உருவாகியுள்ளது.

குடும்ப தலைவிகளை கவரும் நுால்கள்


என்.அனிதா, குடும்ப தலைவி, சிவகங்கை: இக்கண்காட்சியில் குடும்ப தலைவிகளை ஆவலுடன் படிக்க துாண்டும் விதமாக கல்கியின் 'பொன்னியின் செல்வன்', 'சிவகாமி சபதம்' போன்று ஏராளமான வரலாற்று புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. நாளுக்கு நாள் சமையலில் சுவையை கூட்டும் விதமாக விதவிதமான சமையல் கலை புத்தகங்கள் அதிகம் இடம் பெற்றுள்ளன. இக்கண்காட்சிக்குள் நுழைந்து வெளியேறுவதற்குள் அறிவு பசியை போக்கும் அளவிற்கு புத்தகங்கள் நிறைந்துள்ளன.

'வாசிப்பை நேசிக்கும்' அறிவு களஞ்சியம்:


கே.கோபிகா, கல்லுாரி மாணவி, புனித ஜஸ்டின் மகளிர் கல்லுாரி, சோழபுரம்: இங்கு கல்லுாரி முடித்த கையோடு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்விற்கு தயாராவது எப்படி என்பது போன்று ஏராளமான போட்டி தேர்வு புத்தகங்கள் அதிகளவில் கிடைக்கின்றன. சிவகங்கையில் மாவட்ட நிர்வாகம் இது போன்று புத்தக கண்காட்சியை நடத்தி, வருங்கால சந்ததியினர் 'வாசிப்பை நேசிக்கும்' அறிவு களஞ்சியமாக உருவாக்கும் விதத்தில் அமைத்துள்ளனர். புத்தகத்தின் விலையும் குறைந்த அளவில் தான் உள்ளது. ஏழை, நடுத்தர குடும்பத்தினரும் வாங்கும் விதத்தில் தான் புத்தகங்களும் உரிய தள்ளுபடி விலையில் வழங்குகின்றனர்.

ரூ.5 கோ டிக் கு விற்க இலக்கு


எஸ்.கே.முருகன், செயலாளர், புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம்: இங்கு அமைத்துள்ள 110 ஸ்டால்களில் பல்வேறு பதிப்பகத்தார் சார்பில் எழுதப்பட்ட ஆயிரம் தலைப்புகளில் 10 லட்சம் புத்தகங்கள் வரை விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. ஆன்மிகம், கலை, இலக்கியம், வரலாறு, சரித்திர, சமூக நாவல்கள், சங்க இலக்கியம், நாவல், முற்போக்கு சிந்தனை புத்தகங்கள் உள்ளன. ஒவ்வொரு புத்தகத்தின் விலையில் 10 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படும். சிறியவர் முதல் முதியவர் வரை அனைத்து தரப்பினரையும் கவரும் விதத்தில் புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. கடந்த ஆண்டு ரூ.3 கோடிக்கு புத்தகங்கள் விற்றோம். இந்த ஆண்டு ரூ.5 கோடி வரை விற்கும் என எதிர்பார்க்கிறோம். அறிவு பசியை மேம்படுத்தி, வாசிப்பாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்வதின் மூலம், வாசிப்பை நேசிக்க செய்யும் உன்னத பணியை இக்கண்காட்சி செய்து வருகிறது, என்றனர்.






      Dinamalar
      Follow us