/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அடிப்படை வசதி கேட்டு மக்கள் படையெடுப்பு
/
அடிப்படை வசதி கேட்டு மக்கள் படையெடுப்பு
ADDED : ஜூலை 29, 2025 12:40 AM

சிவகங்கை: மாவட்ட அளவில் கிராம மக்கள் குடிநீர், ரோடு, கால்வாய் வசதி கோரி திங்கள்தோறும் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க படையெடுக்கின்றனர். இங்கு குடிநீர் கிடைக்காமல் மக்கள் தவிக்கின்றனர்.
சிவகங்கை மாவட்ட மக்கள் திங்கள்தோறும் நடைபெறும் குறைதீர் கூட்டத்தில் குடிநீர், ரோடு, சுகாதாரக்கேடு உள்ளிட்ட அடிப்படை பிரச்னை களுக்கு தீர்வு காணக் கோரி மனு அளிக்க வருகை தருகின்றனர்.
கிராமங்களில் அடிப்படை பிரச்னைக்கு தீர்வு காண அந்தந்த அதிகாரி களிடம் பல முறை மனு செய்தாலும், தீர்வே கிடைப்பதில்லை என மக்கள் புகார் தெரிவிக் கின்றனர். குறிப்பாக அடிப்படை தேவையான குடிநீர், சுகாதாரம், சாக்கடை கால்வாய் கட்டுதல் போன்ற எந்தவித பிரச்னைக்கும் தீர்வு கிடைப்பதில்லை.
சிவகங்கையில் திங்கள் தோறும் நடக்கும் குறைதீர் கூட்டத்தில் புகார் தெரிவித்தாலாவது, நம் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து, சிவகங்கை கலெக்டரிடம் புகார் மனு அளிக்கின்றனர்.
குறைகள் நிறைந்த கலெக்டர் ஆபிஸ் கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு, குப்பை தேங்கி கிடப்பது, ரோடு வசதி, சாக்கடை கால்வாய்கள் கட்ட மனு அளிக்க கலெக்டர் அலுவலகம் வரும் மக்களுக்கு, அதிர்ச்சி தரும் விதமாக சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகமே குப்பை நிறைந்த பகுதியாக இருப்பதாக புகார் தெரிவிக்கின்றனர்.
கிராம மக்கள் இங்கு குடி நீர் கிடைக்காமல் மக்கள் அல்லாடுகின்றனர். குறிப்பாக கலெக்டர் அலுவலக குறைதீர் கூட்ட அரங்கு அருகிலேயே உள்ள குப்பை தொட்டிகளில் கொட்டப்பட்டுள்ள உணவு கழிவு உட்பட குப்பை பல நாட்களாக அகற்றாமல் வைத்துள்ளனர்.
புதிய கலெக்டரிடம் மனு அளித்தால் நட வடிக்கை இருக்கும் என்ற நம்பிக்கையுடன் வரும் மக்களின் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக அடிப்படை வசதிகளை செய்துதர அதிகாரிகளை கலெக்டர் பொற்கொடி முடுக்கி விடவேண்டும் என மக்கள் விரும்புகின்றனர்.