/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அரசு விளம்பரம் தாயரித்த ஒப்பந்ததாரர்களுக்கு 'பெப்பே!'
/
அரசு விளம்பரம் தாயரித்த ஒப்பந்ததாரர்களுக்கு 'பெப்பே!'
அரசு விளம்பரம் தாயரித்த ஒப்பந்ததாரர்களுக்கு 'பெப்பே!'
அரசு விளம்பரம் தாயரித்த ஒப்பந்ததாரர்களுக்கு 'பெப்பே!'
ADDED : செப் 06, 2025 02:20 AM
சிவகங்கை:தமிழக அரசின் நான்காண்டு சாதனைகள் பற்றி விளம்பரம் செய்த ஒப்பந்ததாரர்களுக்கு, நகராட்சிகளில் இன்னும் நிதி விடுவிக்கப்படாததால், அவர்கள் புலம்பி தவிக்கின்றனர்.
தமிழக அரசின் நான்காண்டு சாதனைகள் குறித்து அந்தந்த துறைகள் சார்பில் விளம்பர போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன. இது குறித்து, 2025 மே 5ம் தேதி நகராட்சிகளின் இயக்குநர் சிவராசு விடுத்த உத்தரவில், அனைத்து நகராட்சிகள் சார்பில் பொது நிதியில் இருந்து அரசின் சாதனைகள் குறித்து போஸ்டர், பிளக்ஸ் போர்டு, சுவர் விளம்பரம், எல்.இ.டி., டிவி.,க்கள் மூலம் ஒளிபரப்பு செய்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டிருந்தார்.
மே 7 முதல் ஜூன் 7 வரை ஒப்பந்ததாரர்கள் வாயிலாக விளம்பரம் செய்யப்பட்டது. ஆனால், இதற்கான நிதியை ஒப்பந்ததாரர்களுக்கு நகராட்சி நிர்வாகம் இன்னும் வழங்கவில்லை.
ஒப்பந்ததாரர்கள் கூறுகையில், 'அரசின் நான்காண்டு சாதனை குறித்து ஒருமாத காலம் முக்கிய இடங்களில் எல்.இ.டி., மூலம் ஒளிபரப்பு செய்தோம். இதற்கான நிதியை, இன்னும் வழங்கவில்லை. தற்போதுள்ள நகராட்சிகளின் நிர்வாக இயக்குநரிடமும் புகார் செய்துள்ளோம்' என்றனர்.