ADDED : செப் 05, 2025 11:52 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே நடந்த விபத்தில் தங்கை பலியான நிலையில் சிகிச்சை பலனின்றி அக்காவும் இறந்தார். மு.கோவில்பட்டியைச் சேர்ந்தவர் பழனியப்பன், விவசாயக்கூலி. இவரது மகள்கள் கவிப்பிரியா 17, சாதனா 8, இருவரும் செப். 5 ல் பால் வாங்க டூவீலரில் வந்தபோது அரசு பஸ் மோதியது. இதில் சாதனா சம்பவ இடத்திலேயே பலியானார். கவிபிரியா மதுரை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பப்பட்டு தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். மீண்டும் சிங்கம்புணரிக்கு கொண்டு வந்த நிலையில், தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். ஒரே குடும்பத்தில் அக்காள் தங்கை இருவரும் விபத்தில் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.