/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அங்கன்வாடி ஊழியருக்கு காலமுறை சம்பளம்; மாவட்ட மாநாட்டில் தீர்மானம்
/
அங்கன்வாடி ஊழியருக்கு காலமுறை சம்பளம்; மாவட்ட மாநாட்டில் தீர்மானம்
அங்கன்வாடி ஊழியருக்கு காலமுறை சம்பளம்; மாவட்ட மாநாட்டில் தீர்மானம்
அங்கன்வாடி ஊழியருக்கு காலமுறை சம்பளம்; மாவட்ட மாநாட்டில் தீர்மானம்
ADDED : ஜன 06, 2025 12:08 AM
சிவகங்கை; அங்கன்வாடி ஊழியர்களுக்கு காலமுறை சம்பளம் வழங்க வேண்டும் என சிவகங்கையில் நடந்த தமிழ்நாடு ஐ.சி.டி.எஸ்., ஊழியர், உதவியாளர் சங்க மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றினர்.
மாநாட்டிற்கு மாவட்ட தலைவர் விக்டோரியா மேரி தலைமை வகித்தார். நிர்வாகி இக்னிஸ் ஜோஸ்பின் ராணி வரவேற்றார்.
தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சங்கரசுப்பிரமணியன் துவக்க உரை ஆற்றினார். மாவட்ட செயலாளர் சேசுமேரி வேலை அறிக்கை வாசித்தார். மாநில பொது செயலாளர் ஆர்.வாசுகி சிறப்புரை ஆற்றினார். தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட செயலாளர் ஜெயப்பிரகாஷ், சத்துணவு ஊழியர் சங்க மாநில துணை தலைவர் மிக்கேல் அம்மாள், தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்க மாநில செயலாளர் ஏ.தமிழரசன், நெடுஞ்சாலை பராமரிப்பு ஊழியர் சங்க மாநில செயலாளர் பிச்சை, மக்கள் நல பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் சுரேஷ்குமார், சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் காளிமுத்து, சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் குமரேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாநில துணை தலைவர் செல்வக்குமார் நிறைவுரை ஆற்றினார்.
தீர்மானம்: அங்கன்வாடி ஊழியர்களுக்கு காலமுறை சம்பளம் வழங்க வேண்டும். பென்ஷன் ரூ.6,750யை அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும். அங்கன்வாடி மையத்தில் உள்ள காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும்.
ஓட்டுச்சாவடி நிலை அலுவலர் பணிக்கு படி தொகையை ரூ.25,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றினர். மாவட்ட இணை செயலாளர் எஸ்.தமிழரசி நன்றி கூறினார்.