/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கை மாவட்டத்தில் 50 மினி பஸ்களுக்கு அனுமதி
/
சிவகங்கை மாவட்டத்தில் 50 மினி பஸ்களுக்கு அனுமதி
ADDED : ஏப் 23, 2025 05:48 AM
சிவகங்கை : மாவட்டத்தில் கிராமங்களுக்கு போக்குவரத்து வசதியை அதிகரிக்க 37 வழித்தடங்களில் 50 மினி பஸ்கள் இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கிராமங்கள் நிறைந்த சிவகங்கை மாவட்ட மக்களுக்கு போதிய பஸ் வசதியை அரசு போக்குவரத்து கழகம் செய்து கொடுப்பதில்லை என்ற புகார் உள்ளது.
மானாமதுரை, திருப்புவனம், தேவகோட்டை, கண்ணங்குடி, சிவகங்கை ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் போதிய பஸ் வசதி இல்லை. இதனால், அரசு மினி பஸ் திட்டத்தை செயல்படுத்த முன்வந்தது.
சிவகங்கை மாவட்டத்தில் கிராமங்களை இணைக்கும் விதமாக அதிக பஸ் போக்குவரத்து தேவைப்படும் பகுதிகளை வட்டார போக்குவரத்து அலுவலர், அரசு போக்குவரத்து கழக அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின் முடிவு படி அரசு பஸ்கள் இயங்காத கிராமங்களில் மினி பஸ் திட்டத்தை செயல்படுத்த, 37 வழித்தடங்களை தேர்வு செய்து, கலெக்டரின் ஒப்புதலுக்கு வழங்கினர்.
கலெக்டர் ஆஷா அஜித் தலைமையில் ஆலோசனை கூட்டமும், பஸ் வழித்தடம் கோரி விண்ணப்பித்தவர்களுக்கு குலுக்கல் முறையில் வழித்தட தேர்வு கூட்டம் நடந்தது. மாவட்ட அளவில் 37 வழித்தடங்களில் 50 மினி பஸ்கள் வரை இயக்கி கொள்ள மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.