UPDATED : அக் 15, 2026 04:42 PM
ADDED : அக் 15, 2026 04:39 PM
அ நிறம் | அளவு
சிவகங்கை: மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஜாதி வாரி கணக்கெடுப்பை நடத்தக்கோரி இதர பிற்பட்டோர் சமூக உரிமைக்கான கட்சியினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அடுத்த ஆண்டு (2027) பிப்., ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளது. அப்பணியுடன் ஜாதி வாரியான கணக்கெடுப்பையும் நடத்த வேண்டும். குறிப்பாக எஸ்.சி., எஸ்.டி., யை கணக்கெடுப்பது போன்றே பிற ஜாதியினர் அனைவரையும் கணக்கெடுப்பில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி சிவகங்கை கலெக்டர் வழியாக ஜனாதிபதிக்கு மனு அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அக்கட்சி தென்மண்டல பொறுப்பாளர் ராஜ்குமார் தலைமையில் நிர்வாகிகள் கோரிக்கை மனுவை சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் பி.ஏ.,(பொது) விஜயகுமாரிடம் வழங்கினர். ///
