/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மயிலாடுதுறை-காரைக்குடி ரயில் மீண்டும் இயக்க கோரி மனு
/
மயிலாடுதுறை-காரைக்குடி ரயில் மீண்டும் இயக்க கோரி மனு
மயிலாடுதுறை-காரைக்குடி ரயில் மீண்டும் இயக்க கோரி மனு
மயிலாடுதுறை-காரைக்குடி ரயில் மீண்டும் இயக்க கோரி மனு
ADDED : ஆக 02, 2025 11:12 PM
காரைக்குடி : காரைக்குடி ரயில்வே ஸ்டேஷனில் ஆய்வு மேற்கொண்ட மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் ஓம் பிரகாஷ் மீனாவிடம், மயிலாடுதுறை-காரைக்குடி ரயிலை மீண்டும் இயக்க வலியுறுத்தி கோரிக்கை மனு வழங்கப்பட்டது.
காரைக்குடி ரயில்வே ஸ்டேஷனில் நடைபெறும் பணிகள் குறித்து மதுரை கோட்ட மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா நேற்று ஆய்வு மேற்கொண்டார். அவரை காரைக்குடி தொழில் வணிகக் கழகம் மற்றும் காரைக்குடி வட்ட ரயில் பயணிகள் நலச் சங்கத்தினர் வரவேற்றனர்.
அதில், காரைக்குடி- சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலை 3வது நடை மேடைக்கு மாற்றியதால் பயணிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே மீண்டும் முதல் நடைமேடைக்கு மாற்ற வேண்டும். காரைக்குடி- மயிலாடுதுறை பாசஞ்சர் ரயிலை மீண்டும் இயக்குவதோடு, மானாமதுரை வழியாக மதுரைக்கு இருமுறை இயக்க வேண்டும்.
பாலக்காடு-திருச்சி எக்ஸ்பிரஸ் ரயிலை காரைக்குடி அல்லது ராமேஸ்வரம் வரை நீட்டிப்பு செய்ய வேண்டும். திருச்சி, காரைக்குடி, மானாமதுரைக்கு சென்று வந்த பாசஞ்சர் ரயில் காரைக் குடியில் நிறுத்தப்பட்டது.
இதனை, மீண்டும் மானாமதுரை வரை இயக்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர். விரைந்து நடவடிக்கை எடுப்பதாக கோட்ட மேலாளர் தெரிவித்தார்.