ADDED : மார் 19, 2025 06:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழச்சிவல்பட்டி : திருப்புத்துார் அருகே தேசிய நெடுஞ்சாலையில் விதி மீறி அமைக்கப்பட்ட டோல்கேட்டை மாற்ற உத்தரவிட்ட கோர்ட் உத்தரவை நிறைவேற்ற கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
கீழச்சிவல்பட்டி முன்னாள் காங். தலைவர் செல்வமணி, வர்த்தக சங்கத் தலைவர் சையது உசேன் ஆகியோர் தலைமையில் சென்ற கிராமத்தினர் சிவகங்கை குறைதீர்க்கும் நாளில் மனு அளித்தனர்.
தேசிய நெடுஞ்சாலை 36 ல் விதிமீறி செண்பகம் பேட்டையில் அமைக்கப்பட்ட டோல்கேட்டில் தொடர்ந்து கட்டணம் வசூலிப்பதை நிறுத்த கோரியும், ஐகோர்ட் உத்தரவை விரைவாக நிறைவேற்ற கோரியும் கலெக்டரிடம் மனு அளித்தனர்.