/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அரசு பள்ளி துாய்மை பணியாளருக்கு சம்பளம் வழங்க கலெக்டரிடம் மனு
/
அரசு பள்ளி துாய்மை பணியாளருக்கு சம்பளம் வழங்க கலெக்டரிடம் மனு
அரசு பள்ளி துாய்மை பணியாளருக்கு சம்பளம் வழங்க கலெக்டரிடம் மனு
அரசு பள்ளி துாய்மை பணியாளருக்கு சம்பளம் வழங்க கலெக்டரிடம் மனு
ADDED : டிச 19, 2024 04:48 AM
சிவகங்கை: அரசு பள்ளிகளில் பணிபுரியும் துாய்மை பணியாளர்களுக்கு நிறுத்தப்பட்ட சம்பளத்தை மீண்டும் வழங்க கோரி கலெக்டர் ஆஷா அஜித்திடம், தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.
அரசு பள்ளிகளில் துாய்மை பணிகளை மேற்கொள்ள அரசு நிதி ஒதுக்கீடு செய்து 2016 ம் ஆண்டில் இருந்து செயல்படுத்தி வருகிறது. இத்துாய்மை பணியாளர்களுக்கு ஊரக வளர்ச்சி துறையின் மூலம் சம்பளம் வழங்கப்படுகிறது.
கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக சம்பளம் நிறுத்தப்பட்டன. துாய்மை பணியாளருக்கு தொடக்க பள்ளிக்கு மாதம் ரூ.1000, நடுநிலை பள்ளிக்கு ரூ.1,500 வீதம் வழங்கப்பட்டது. ஆனால், சிவகங்கை மாவட்டத்தில் அனைத்து அரசு தொடக்க, நடுநிலை பள்ளிகளில் பணிபுரியும் துாய்மை பணியாளர்களுக்கு 10 மாதங்களுக்கும் மேலாக சம்பளம் வழங்கவில்லை.
இதையடுத்து இம்மாவட்டத்தில் பணிபுரியும் துாய்மை பணியாளர்களுக்கு உடனே நிலுவையுடன் கூடிய சம்பளத்தை விடுவிக்க கோரி கலெக்டர் ஆஷா அஜித்திடம், தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில துணை தலைவர் ஆரோக்கியராஜ், மாவட்ட தலைவர் புரட்சிதம்பி, செயலாளர் சகாய தைனேஸ், பொருளாளர் கலைச்செல்வி உள்ளிட்டோர் மனு அளித்தனர்.