/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மகளிர் உரிமைத்தொகை கேட்டு குவியும் மனுக்கள்
/
மகளிர் உரிமைத்தொகை கேட்டு குவியும் மனுக்கள்
ADDED : ஜூலை 16, 2025 11:38 PM
திருப்புத்துார்: திருப்புத்துாரில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மகளிர் உரிமைத்தொகை கேட்டு அதிகமான பெண்கள் மனு அளித்தனர்.
திருப்புத்துார் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன.இதில் ஒன்று முதல் 9 வார்டு பகுதி மக்கள் மட்டும் பங்கேற்றனர். முகாமை தாசில்தார் மாணிக்கவாசகம் முன்னிலையில் உதவி ஆணையர் ரெங்கநாதன், பேரூராட்சி தலைவர் கோகிலாராணி நாராயணன் துவக்கினர்.முகாமில் பேரூராட்சி துறை,மகளிர் உரிமைத்துறை,வருவாய்த்துறை, மின்சார துறை உள்ளிட்ட 14 துறை அலுவலர்கள் மக்களிடம் மனு வாங்கினர்.
முகாமில் வருவாய்த்துறை,பேரூராட்சி உள்ளிட்ட 14 துறைகள் சார்ந்த மனுக்கள் பெறப்பட்டது. 830க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டதில் 50 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. மற்ற மனுக்களுக்கு 45 நாளில் தீர்வு காணப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மொத்த மனுக்களில் 50 சதவீத மனுக்கள் மகளிர் உரிமைத் தொகை கேட்டு பெண்கள் விண்ணப்பித்திருந்தனர்.
இவற்றுடன் பட்டா வழங்கவும், பட்டா பெயர் மாற்றம், ரேஷன் அட்டை, ஆதார் அட்டை, மின் இணைப்பு, மின் இணைப்பில் பெயர்மாற்றம் என்று பலவித சேவைகளுக்கு விண்ணப்பித்தனர்.