/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பெட்ரோல் பங்க் டீலர்கள் எஸ்.பி., அலுவலகத்தில் புகார்
/
பெட்ரோல் பங்க் டீலர்கள் எஸ்.பி., அலுவலகத்தில் புகார்
பெட்ரோல் பங்க் டீலர்கள் எஸ்.பி., அலுவலகத்தில் புகார்
பெட்ரோல் பங்க் டீலர்கள் எஸ்.பி., அலுவலகத்தில் புகார்
ADDED : ஜூலை 22, 2025 11:48 PM
சிவகங்கை; மானாமதுரையில் டூவீலருக்கு பெட்ரோல் நிரப்பி விட்டு பணம் கொடுக்க மறுத்து பங்க் ஊழியரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பெட்ரோல் பங்க் டீலர்கள் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
மானாமதுரை தர்வேஸ் முகைதீன் மானாமதுரையில் பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார். இவரது பங்கில் ஜூலை 12 இரவு 9:30 மணிக்கு ஒரு இளைஞர் டூவீலருக்கு ரூ.100க்கு பெட்ரோல் நிரப்பிவிட்டு பணம் கொடுக்காமல் ஊழியரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இது குறித்து தர்வேஸ் முகைதீன் மானாமதுரை போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் பங்க் ஊழியர் மீதும் அந்த இளைஞர் மீது மானாமதுரை போலீசார் வழக்கு பதிந்தனர்.
அந்த இளைஞர் பங்க் உரிமையாளர் தர்வேஸ் முகைதீன் குடும்பத்தாரை அச்சுறுத்துவதாகவும் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் பங்க் ஊழியர் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் மதுரை இண்டியன் ஆயில் டீலர்ஸ் அசோசியஷன் சார்பில் சிவகங்கை, மதுரை மாவட்ட பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சிவகங்கை எஸ்.பி., அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.