/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கீழடியில் 11ம் கட்ட அகழாய்வு 2026ல் நடைபெற வாய்ப்பு
/
கீழடியில் 11ம் கட்ட அகழாய்வு 2026ல் நடைபெற வாய்ப்பு
கீழடியில் 11ம் கட்ட அகழாய்வு 2026ல் நடைபெற வாய்ப்பு
கீழடியில் 11ம் கட்ட அகழாய்வு 2026ல் நடைபெற வாய்ப்பு
ADDED : ஜன 29, 2025 01:35 AM
கீழடி:தமிழக தொல்லியல் துறை சார்பில் கீழடியில் 11ம் கட்ட அகழாய்வு அடுத்தாண்டு ஜனவரியில் தொடங்கும் என தெரியவந்துள்ளது.
கீழடியில் 2015ல் மத்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் பண்டைய தமிழர் நாகரீகத்தை தேடி அகழாய்வு பணிகளை தொடங்கினர். இதில் 2ஆயிரத்து 600 ஆண்டுகளுக்கு முன் மிகப்பெரிய குடியிருப்பு பகுதியாக இருந்தது கண்டறியப்பட்டது.
மக்கள் விவசாயம், நெசவு தொழில், கால்நடை வளர்ப்பு, கல்வியறிவு உள்ளிட்டவற்றில் சிறந்து விளங்கியது தெரிய வந்தது. மத்திய தொல்லியல் துறை மூன்று கட்ட அகழாய்வை நடத்தி முடித்தது. அதன்பின் தமிழக தொல்லியல் துறை மத்திய அரசின் அனுமதி பெற்று கீழடியில் அகழாய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறது. கீழடியுடன் அகரம், கொந்தகை, மணலுார் உள்ளிட்ட இடங்களிலும் அகழாய்வு நடத்தியது.
இதுவரை தமிழக தொல்லியல் துறை சார்பில் ஏழு கட்ட அகழாய்வு பணிகள் நடந்துள்ளன. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரியில் தொடங்கி செப்டம்பருடன் அகழாய்வு நிறைவு பெறும். இதன் அறிக்கை மத்திய அரசுக்கு அனுப்பபடும்.
2024ல் 10ம் கட்ட அகழாய்வு லோக்சபா தேர்தல் காரணமாக தாமதமாக ஜூன் 18ல் தொடங்கியது. 2023ல் ஒன்பதாம் கட்ட அகழாய்வும் தாமதமாக தொடங்கப்பட்டதால் 804 பொருட்கள் மட்டுமே கண்டறியப்பட்டது.
எனவே 10ம் கட்ட அகழாய்வு 2024 ஜூன் தொடங்கி 2025 ஏப்ரல் வரை நடைபெறும் என தமிழக தொல்லியல் துறை அறிவித்தது. வரும் ஏப்ரல் வரை 10ம் கட்ட அகழாய்வு நடைபெற உள்ளதால் அதன்பின் கண்டறிந்த பொருட்களை ஆவணப்படுத்தும் பணி, மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பும் பணி நடைபெற ஒரு சில மாதங்கள் ஆகும். அதன்பின் விண்ணப்பித்து 11ம் கட்ட அகழாய்விற்கு அனுமதி டிசம்பரில் தான் கிடைக்கும். எனவே 11ம் கட்ட அகழாய்வு அடுத்தாண்டு தான் நடைபெறும்.