/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
விஷவாயு தாக்கி இறந்தவர்களின் உடலை வாங்க மறுத்து மறியல்
/
விஷவாயு தாக்கி இறந்தவர்களின் உடலை வாங்க மறுத்து மறியல்
விஷவாயு தாக்கி இறந்தவர்களின் உடலை வாங்க மறுத்து மறியல்
விஷவாயு தாக்கி இறந்தவர்களின் உடலை வாங்க மறுத்து மறியல்
ADDED : செப் 23, 2024 06:20 AM
இளையான்குடி : இளையான்குடியில் விஷவாயு தாக்கி இறந்த 2 தொழிலாளர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.30 லட்சம் நிவாரணம், அரசு வேலை வழங்க கோரி உடல்களை வாங்க மறுத்து மறியலில் ஈடுபட்டனர்.
இளையான்குடி அருகே சித்தூர் அணி ரோட்டில் பிஸ்மில்லா நகரில் சிக்கந்தர் என்பவர் வீட்டில் கழிவுநீர் தொட்டி அமைப்பதற்காக 25 அடி ஆழத்திற்கும் மேலாக குழி தோண்டும் போது நேற்று முன்தினம் சீத்தூரணி கிராமத்தை சேர்ந்த தடியன் மகன் ராமையா 56, திருவுடையார்புரம் கருப்பையா மகன் பாஸ்கரன் 50, விஷவாயு தாக்கி பலியாகினர்.
இளையான்குடி அரசு மருத்துவமனையில் உள்ள அவர்களது உடலை வாங்க மறுத்து பல்வேறு அமைப்பு, கிராமத்தினர் இளையான்குடி - பரமக்குடி ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இறந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.30 லட்சம், அரசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.
சிவகங்கை கோட்டாட்சியர் விஜயகுமார், இவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்திய பின், உடல்களை பெற்று சென்றனர்.