ADDED : ஆக 14, 2025 11:21 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி, ; சிங்கம்புணரியில் அரசுப்பள்ளி பெண் ஆசிரியர் ஒருவர் நேற்று சிங்கம்புணரி வங்கி ஏ.டி.எம்.,மில் பணம் எடுக்க சென்றுள்ளார்.
அப்போது அருகில் இருந்த நபர் ஏ.டி.எம்., சரியாக வேலை செய்யவில்லை, ஏ.டி.எம்., அட்டையை துாசி இல்லாமல் துடைத்துப் போட வேண்டும் எனக் கூறி கார்டை வாங்கி துடைப்பது போல் வேறு ஒரு கார்டை மாற்றி கொடுத்துள்ளார்.
ஆசிரியை பயன்படுத்திய ரகசிய எண்ணையும் அறிந்து கொண்ட அந்நபர், அருகே உள்ள வேறு ஏ.டி.எம்.,ல் ஆசிரியரின் வங்கிக்கணக்கில் இருந்து 40 ஆயிரம் ரூபாயை எடுத்துக் சென்றுள்ளார். ஆசிரியர் அளித்த புகாரில் சிங்கம்புணரி போலீசார் விசாரிக்கின்றனர்.