/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அட்டக்குளத்தில் கழிவு நீர் அகற்றம் பூங்கா, நடைபாதை அமைக்க திட்டம்
/
அட்டக்குளத்தில் கழிவு நீர் அகற்றம் பூங்கா, நடைபாதை அமைக்க திட்டம்
அட்டக்குளத்தில் கழிவு நீர் அகற்றம் பூங்கா, நடைபாதை அமைக்க திட்டம்
அட்டக்குளத்தில் கழிவு நீர் அகற்றம் பூங்கா, நடைபாதை அமைக்க திட்டம்
ADDED : ஆக 16, 2025 02:32 AM

திருப்புத்துார்: திருப்புத்துாரில் 50 ஆண்டுகளுக்குப் பின் அட்டக்குளத்திலிருந்து கழிவுநீர் அகற்றப்பட்டு துார்வாரும் பணி நடந்து வருகிறது.
திருப்புத்துார் நகரின் பல பகுதிகளிலிருந்தும் வரும் கழிவுநீர் செல்லும் வாய்க்கால் அட்டக் குளம் அருகில் அழிந்து விட்டதால், கழிவுநீர் தென்மாப்பட்டில் உள்ள அட்டக் குளத்தில் சேகரமாகி வெளியேறாமல் நின்றது. இதனால் குளத்து நீர் மாசடைந்து முற்றிலும் கழிவுநீராக மாறி விட்டது.
மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் கழிவு நீர் குட்டையாக மாறியது. இப்பகுதியில் நிலத்தடி நீரும் கருப்பாக மாறி யதுடன் துர்நாற்றமும் வீசியது. பல ஆண்டு களாக பொதுமக்கள் அட்டக்குளத்தை பராமரித்து கழிவுநீர் குளத்தில் கலக்காமல் தடுக்க கோரினர்.
இதனையடுத்து பேரூராட்சி தலைவர் கோகிலராணி கழிவுநீரை கொண்டு செல்ல தனி கான்கிரீட் வடிகால் அமைக்கும் பணியை துவக்கினார். கழிவுநீர் வடிகால் பணி நிறைவடைந்ததும் குளத்திற்கு வராமல் கழிவுநீர் முழுவதுமாக நகருக்கு வெளியே கடத்தப் படும். தொடர்ந்து குளத்தை துார்வாரும் பணியும் துவங்கியுள்ளது.
50 ஆண்டுகளுக்கு பின் குளத்திலுள்ள கழிவு நீர் முழுவதுமாக வெளி யேற்றப்பட்டு, கசடு படிந்த மண் அகற்றப்பட்டு வருகிறது. பின்னர் குளத்தைச் சுற்றிலும் வேலியிட்டு பூங்கா, நடைபாதை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

