/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மடப்புரம் கோயிலில் கூடுதல் கடைகள் அமைத்து வாடகைக்கு விட திட்டம்
/
மடப்புரம் கோயிலில் கூடுதல் கடைகள் அமைத்து வாடகைக்கு விட திட்டம்
மடப்புரம் கோயிலில் கூடுதல் கடைகள் அமைத்து வாடகைக்கு விட திட்டம்
மடப்புரம் கோயிலில் கூடுதல் கடைகள் அமைத்து வாடகைக்கு விட திட்டம்
ADDED : ஜூலை 20, 2025 11:09 PM

திருப்புவனம்: மடப்புரம் காளி கோயிலில் கூடுதல் கடைகள் அமைத்து வாடகைக்கு விட ஹிந்து சமய அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற காளி கோயில்களில் ஒன்றான மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் உள்ளது. தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வந்து செல்கின்றனர்.
பக்தர்களை நம்பி கோயில் வாசலில் தேங்காய், பழம், சூடம், எலுமிச்சை மாலை, விற்பனை செய்யும் கடைகள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் ரோட்டில் கடை அமைத்துள்ளனர். போக்குவரத்து நெரிசலை தீர்க்கும் வண்ணமாகவும் பக்தர்களின் வசதிக்காகவும் ரூ.2.28 கோடியில் கோயில் எதிரே தங்குமிடம், வாகன நிறுத்தம், 20 கடைகள் கட்டி ஏலம் விட்டுள்ளனர். மேலும் 40 கடைகளுக்கான தகர செட் அமைத்து வாடகைக்கு விட அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
ஹிந்து அறநிலைய அதிகாரிகள் கூறியதாவது, கோயில் வாசலை ஆக்கிரமித்து பலரும் கடைகள் வைத்துள்ளனர். இதனால் மடப்புரம் வழியே மஞ்சக்குடி, ஏனாதி, தேளி, கண்ணாரிருப்பு கிராமங்களுக்கு செல்வோர் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே கோயில் முன் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி ரோட்டை அகலப்படுத்த திட்டமிட்டுள்ளோம். ரோட்டின் நடுவே மீடியன் அமைப்பதுடன், புதிய வணிக வளாகம் எதிரே உள்ள காலி இடத்தில் கூடுதலாக 40 கடைகள் அமைக்கப்படும். பக்தர்கள் வாகனங்கள் வாகன காப்பகத்தில் நிறுத்தி விட்டு அங்கிருந்து பூஜை பொருட்களை வாங்கி கொண்டு கோயிலின் நுழைவு வாயிலுக்கு வர பாதைகள் அமைக்கப்படும், என்றனர்.