/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மதுரை-பரமக்குடி ரோட்டில் 7 ஆயிரம் மரக்கன்றுகள் நடுதல்
/
மதுரை-பரமக்குடி ரோட்டில் 7 ஆயிரம் மரக்கன்றுகள் நடுதல்
மதுரை-பரமக்குடி ரோட்டில் 7 ஆயிரம் மரக்கன்றுகள் நடுதல்
மதுரை-பரமக்குடி ரோட்டில் 7 ஆயிரம் மரக்கன்றுகள் நடுதல்
ADDED : செப் 28, 2025 06:58 AM

மானாமதுரை: மதுரை-பரமக்குடி நான்கு வழிச்சாலையில் மானாமதுரை பகுதியில் வனத்துறை சார்பில் 7 ஆயிரம் மரக்கன்று நடும் பணி நடைபெற்று வருகிறது.
மதுரையில் இருந்து பரமக்குடி வரை நான்கு வழிச்சாலையாகவும்,பரமக்குடியில் இருந்து ராமேஸ்வரம் வரை இருவழிச்சாலையாக வும் மாற்றப்படுவதற்கு முன் ரோட்டின் இரு புறங்களிலும் ஆயிரக்கணக்கான நிழல் தரும் மரங்கள் இருந்த நிலையில் நான்கு வழிச்சாலைக்காக மரங்கள் அகற்றப்பட்டன.
தற்போது நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டு 7 ஆண்டுகளாகியும் இந்த ரோட்டின் ஓரங்களில் மரங்கள் இல்லாததால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் இயற்கை,சமூக ஆர்வலர்களும் நான்கு வழிச்சாலையில் நிழல் தரும் மரங்களை நட வேண்டுமென்று நீண்ட வருடங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தற்போது வனத்துறை சார்பில் மானாமதுரையில் இருந்து ராமநாதபுரம் மாவட்ட எல்லை வரை ரோட்டின் இரு புறங் களிலும் பல்வேறு நிழல் தரும் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு வருகின்றனர்.