/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மதுரை கோட்ட அளவில் 7 ரயில்வே ஸ்டேஷன்களில் நடைமேடை நீட்டிப்பு * தெற்கு ரயில்வே திட்டம்

ADDED : மே 15, 2025 02:32 AM
சிவகங்கை:மதுரை ரயில்வே கோட்டத்தில் உள்ள 7 ரயில்வே ஸ்டேஷன்களில் நடைமேடைகளை நீட்டிக்க தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுத்து வருகிறது.
மத்திய அரசு அம்ரூத் திட்டத்தில் முதல், இரண்டாம் தர ரயில்வே ஸ்டேஷன்களில் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி, தரம் உயர்த்தி வருகிறது. அடுத்த கட்டமாக முக்கிய ரயில்களில் பெட்டிகளின் எண்ணிக்கையை 24 ஆக அதிகரித்து வருகின்றனர். அதற்கேற்ப ரயில்வே ஸ்டேஷன்களில் உள்ள நடைமேடைகளை நீட்டிக்கவும் தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.
ராமநாதபுரம் உச்சிப்புளி, மண்டபம், திருநெல்வேலி மாவட்டம் பாளை, துாத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரி, தாதன்குளம், கேரளா கச்சனாவில்லை, புனலுார் அருகே எழுகோன் ஆகிய 7 ரயில்வே ஸ்டேஷன்களில் நடைமேடைகளை நீட்டிக்க ரயில்வே முடிவு செய்துள்ளது.
ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது, பிளாட்பாரம்களை 150 முதல் 250 மீட்டர் வரை நீட்டிக்க உள்ளோம். மேலும் பல ஸ்டேஷன்களில் ரூ.2.5 கோடி முதல் ரூ.50 கோடி வரை பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன என்றனர்.