sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 03, 2026 ,மாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

 பிளஸ் 2 தேர்வு: 212 பேர் ஆப்சென்ட்

/

 பிளஸ் 2 தேர்வு: 212 பேர் ஆப்சென்ட்

 பிளஸ் 2 தேர்வு: 212 பேர் ஆப்சென்ட்

 பிளஸ் 2 தேர்வு: 212 பேர் ஆப்சென்ட்


ADDED : மார் 03, 2026 05:23 AM

Google News

ADDED : மார் 03, 2026 05:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் நேற்று நடந்த பிளஸ் 2 பொதுத்தேர்வில் 16 ஆயிரத்து 229 மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர். இதில் 212 மாணவர்கள் தேர்விற்கு வரவில்லை.

தமிழகம் முழுவதும் நேற்று பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடங்கியது. சிவகங்கை மாவட்டத்தில் 68 அரசுப்பள்ளிகள் உட்பட 163 மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 7506 மாணவர்கள், 8939 மாணவியர் என மொத்தம் 16,445 மாணவர்கள் 91 தேர்வு மையங்களிலும், 279 பேர் தனித்தேர்வர்களாகவும் தேர்வு எழுதுகின்றனர்.

நேற்று நடந்த தேர்வில் 7 ஆயிரத்து 394 மாணவர்களும், 8 ஆயிரத்து 835 மாணவியர்களும் என மொத்தம் 16 ஆயிரத்து 229 மாணவர்கள் வருகை புரிந்து தேர்வு எழுதினர். 111 மாணவர்களும், 101 மாணவியர்களும் என மொத்தம் 212 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை.

ஒரு மாணவர் மற்றும் 3 மாணவியர்கள் மொழிப்பாட விலக்கு பெறப்பட்டு உள்ளனர். கண் குறைபாடு மற்றும் நரம்பியல் குறைபாடு உடைய 119 மாற்றுத்திறனாளித் தேர்வர்களில் 99 பேருக்கு சொல்வதை எழுதுபவர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தேர்வுப் பணிக்காக 8 வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள், 91 முதன்மைக் கண்காணிப்பாளர்கள், 91 துறை அலுவலர்கள், 1304 அறைக் கண்காணிப்பாளர்கள் மற்றும் 108 நிலையான படையினர், 26 வழித்தட அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் எஸ்.ஐ., தலைமையில் பாதுகாப்பு பணி மேற்கொள்ளப் பட்டது.






      Dinamalar
      Follow us