நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிறுமியை சீரழித்தவருக்கு வலை புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், மணவாளங்கரையை சேர்ந்தவர், 14 வயது சிறுமி; ஒன்பதாம் வகுப்பு படிக்கிறார். வயிற்று வலியால் பாதிக்கப்பட்ட சிறுமியை, அரசு மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்து சென்ற போது, அவர் கர்ப்பமாக இருப்பது தெரிந்தது.
திருமயம் போலீசார் சிறுமியிடம் விசாரித்ததில், அதே ஊரை சேர்ந்த விஜயன், 59, என்பவர் பலாத்காரம் செய்ததாக கூறினார்.
விஜயன் மீது போக்சோ வழக்கு பதிந்த போலீசார், அவரை தேடுகின்றனர்.
'சில்மிஷ' தொழிலாளி கைது வேலுார்: வேலுார் மாவட்டம், காட்பாடியை சேர்ந்த தொழிலாளி அருண்குமார், 33. ஆம்பூரிலுள்ள ஏ.டி.எம்., மையத்திற்குள் பணம் எடுக்க, 15 வயது சிறுமி சென்றார். அங்கிருந்த அருண்குமார், சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். ஆம்பூர் தாலுகா போலீசார், அருண்குமாரை போச்சோவில் நேற்று கைது செய்தனர்.

