/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சு போட்டி அக்.,14, 15 ல் நடக்கிறது

ADDED : செப் 29, 2025 06:41 AM
சிவகங்கை : சிவகங்கையில் மாவட்ட அளவிலான பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகள் அக்., 14 மற்றும் 15 அன்று மன்னர் மேல்நிலை பள்ளி கலையரங்கில் நடக்க உள்ளது. தமிழ் வளர்ச்சி துறை சார்பில் பிளஸ் 1, 2 மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகள் அக்., 14ல், கல்லுாரி மாணவர்களுக்கு அக்., 15ல் நடைபெறும்.
மாவட்ட அளவில் வெற்றி பெறும் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.10,000, இரண்டாம் பரிசு ரூ.7,000, மூன்றாம் பரிசு ரூ.5,000 வழங்கப்படும்.
அனைத்து அரசு, உதவி பெறும், தனியார் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பங்கேற்கலாம். ஒவ்வொரு போட்டிக்கும் பள்ளி, கல்லுாரிக்கு தலா ஒரு மாணவர் மட்டுமே பங்கேற்க வேண்டும்.
போட்டி நடக்கும் நாளில் காலை 9:30 மணிக்குள் வரவேண்டும். போட்டி துவங்கும் முன் தலைப்புகள் வழங்கப்படும்.
பள்ளி தலைமை ஆசிரியர், கல்லுாரி முதல்வர் கடிதத்துடன் வரவேண்டும். அக்., 10 மாலை 4:00 மணிக்குள் உதவி இயக்குனர், தமிழ்வளர்ச்சித்துறை, சிவகங்கைக்கு tamil valarchithurai2014@gmail.com '' இ- மெயில் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.