ADDED : செப் 02, 2026 05:02 PM
அ நிறம் | அளவு
சிவகங்கை,செப்.3-
சோழபுரம் புனித ஜஸ்டின் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி தமிழ்த்துறை மற்றும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம் இணைந்து கவிதைப் பயிலரங்கம் நடத்தியது.
கல்லுாரிச் செயலாளர் ஸ்டெல்லா தலைமை வகித்தார். துறைத்தலைவர் சாந்தி வரவேற்றார். முதல்வர் பாக்கிய சீமா, கிளைத்தலைவர் கொம்பு வேலு, பொருளாளர் ஜூலியட் முன்னிலை வகித்தனர். தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் சிவப்பிரகாஷ், பாரதி சண்முகம் வாழ்த்தி பேசினர். கவிதை இதுவென தலைப்பில் தங்கமுனியாண்டி, கவிதை பழகலாம் வாங்க தலைப்பில் இளவரசி, பெண் எழுத்து நோக்கும் போக்கும் தலைப்பில் மகாலட்சுமி பேசினர். கிளைச்செயலாளர் பிசன்னா நன்றி கூறினார்.
