கார் மோதி மூதாட்டி பலி
திருப்புத்தூர்: திருப்புத்துார் அருகே தம்பிபட்டி மாணிக்கம் மனைவி வள்ளிக்கண்ணு 78. இவர் திருப்புத்துார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு மருத்துவமனை எதிரே மதுரை ரோட்டை கடந்து சென்றார். அப்போது மதுரை நோக்கி சென்ற கார் மோதியதில் காயமுற்று, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
தற்கொலை
சிவகங்கை: சிவகங்கை அருகே ஒக்கூர் லிங்கம் 49. இவர் வெளிநாட்டில் வேலை செய்து, கடந்த 4 மாதங்களுக்கு முன் சொந்த ஊருக்கு வந்துள்ளார். குடும்ப பிரச்னையில் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். மதகுபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
* காளையார்கோவில் பகுதியை சேர்ந்த 8 ம் வகுப்பு மாணவி. இவர் அரையாண்டு தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால், பெற்றோர் திட்டுவார்கள் என பயந்து, வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
மணல் திருட்டு டிராக்டர் பறிமுதல்
தேவகோட்டை: தேவகோட்டை தாலுகா போலீசார், தேனாற்றில் மணல் திருட்டை தடுக்க வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கண்ணங்குடி அருகே தேவரேந்தல் கிராமம் அருகே தேனாற்றில் மண் அள்ளும் இயந்திரம், டிராக்டர் நின்றிருந்தது. போலீசார் அவற்றை பறிமுதல் செய்து, தப்பியோடிய டிரைவர்களை தேடி வருகின்றனர்.