/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ரயில்வே ஸ்டேஷனில் போலீசார் சோதனை
/
ரயில்வே ஸ்டேஷனில் போலீசார் சோதனை
ADDED : ஜன 26, 2025 06:45 AM

காரைக்குடி :  காரைக்குடி ரயில்வே ஸ்டேஷனில் குடியரசு தினத்தை முன்னிட்டு, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
நாடு முழுவதும் குடியரசு தின விழா இன்று கொண்டாடப்படுகிறது.  மக்கள் அதிகம் கூடும் முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
காரைக்குடி ரயில்வே ஸ்டேஷனில் ரயில்வே போலீசார் நேற்று சோதனை மேற்கொண்டனர். ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்த பயணிகளின் உடைமைகளை மெட்டல் டிடெக்டர் கருவி மூலம்  சோதனை செய்த பிறகே ரயில்வே ஸ்டேஷனுக்குள் அனுமதித்தனர்.
தொடர்ந்து, பொருட்கள் வைப்பறை, வாகனம் நிறுத்துமிடம், தண்டவாளங்கள், ரயில் நடை மேடைகளிலும் போலீசார் ஆய்வு செய்தனர்.
இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையில், எஸ்.ஐ., சவுதாமா, சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

