/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ரோட்டில் கடை அமைக்க போலீசார் அனுமதி மறுப்பு
/
ரோட்டில் கடை அமைக்க போலீசார் அனுமதி மறுப்பு
ADDED : அக் 19, 2024 05:19 AM

மானாமதுரை : மானாமதுரையில் வாரச்சந்தையை ஒட்டி இளையான்குடி ரோட்டில் கடைகள் அமைக்க வியாபாரிகளுக்கு போலீசார் அனுமதி மறுத்ததால் வியாபாரிகள் நகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டு போராட்டம் நடத்தினர்.
மானாமதுரையில் வியாழக்கிழமை நடைபெறும் வாரச்சந்தையில் மதுரை, திருப்புவனம், திருப்பாச்சேத்தி, சிவகங்கை, இளையான்குடி, பரமக்குடி உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலிருந்து 300க்கும் மேற்பட்ட வியாபாரிகள் பல்வேறு வகையான பொருட்களை வியாபாரம் செய்து வருகின்றனர். வாரச்சந்தைக்கு வெளியே இளையான்குடி ரோட்டிலும் ஏராளமான வியாபாரிகள் கடைகளை அமைத்து வியாபாரம் செய்து வந்தனர்.
இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. மானாமதுரை போலீஸ் டி.எஸ்.பி., நிரேஷ் மற்றும் போலீசார் இந்த வாரம் இளையான்குடி ரோட்டில் வியாபாரிகள் கடைகளை அமைக்க அனுமதி மறுத்து ஏராளமான போலீசாரை பாதுகாப்பு பணியில் நிறுத்தினர். இதனைத் தொடர்ந்து வியாபாரிகள் நகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டு போராட்டம் நடத்தினர். வியாபாரிகள் வாரச்சந்தை வளாகத்திற்குள் கடைகளை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.