/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
நீதிமன்றத்தில் போலீஸ் பாதுகாப்பு
/
நீதிமன்றத்தில் போலீஸ் பாதுகாப்பு
ADDED : டிச 24, 2024 04:34 AM
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றத்திலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட எஸ்.பி., டோங்கரே பிரவீன் உமேஷ் உத்தரவிட்டார்.
திருநெல்வேலியில் மாவட்ட நீதிமன்றம் நுழைவு வாயில் அருகே மாயாண்டி என்ற இளைஞர் கடந்த வெள்ளிக்கிழமை வெட்டி கொலை செய்யப்பட்டார். சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தாமாக முன்வந்து இந்த கொலை வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டனர்.
போலீஸ் தரப்புக்கு பல கேள்விகளை எழுப்பி நீதிமன்றங்களில் நிரந்தர பாதுகாப்பு ஏற்பாடு செய்யும்வரை தற்காலிகமாக மாவட்ட நீதிமன்றங்கள் முக்கியமான இடங்களில் தேவையான எண்ணிக்கையில் ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு வழங்கவேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தமிழகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்துவதோடு, துப்பாக்கி ஏந்திய போலீசாரை பாதுகாப்புக்காக நிறுத்த வேண்டும் என டி.ஜி.பி., சங்கர்ஜிவால் அனைத்து மாவட்ட எஸ்.பி.,க்கும் உத்தரவு பிறப்பித்தார்.
சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் 2 எஸ்.ஐ.,க்கள் தலைமையில் 15 போலீசாரும், மற்ற தாலுகாவில் உள்ள நீதிமன்றங்களில் எஸ்.ஐ., தலைமையில் மொத்தம் 48 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.