/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரை மேம்பாலத்தில் விதிமீறல் விபத்தை தடுக்க தடுப்பு அமைத்த போலீஸ்

ADDED : ஜூன் 05, 2025 01:17 AM

மானாமதுரை: மானாமதுரை வைகை ஆறு மேம்பாலத்தில் விதிமீறலால் அடிக்கடி நடைபெறும் விபத்துக்களை தடுக்கும் வகையில் டிராபிக் போலீசார் தடுப்புகளை அமைத்துள்ளனர்.
மானாமதுரையில் சிவகங்கை ரோடு,மெயின் பஜார்,பழைய பஸ் ஸ்டாண்ட் ரோடு,அண்ணாதுரை சிலை,தேவர் சிலை, வாரச்சந்தை ரோடு உள்ளிட்ட ரோடுகளில் அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 டூவீலர்கள் மோதிக் கொண்டதில் ராமச்சந்திரன் என்பவர் பலியானார்.
இருவர் படுகாயமடைந்தனர்.இதனைத் தொடர்ந்து போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ்வரன் மற்றும் போலீசார் மேற்கண்ட இடங்களில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்தை தடுக்க ரோட்டின் மையத்தில் தடுப்பு வைத்துள்ளனர். குறிப்பாக மானாமதுரையில் பாலம் துவங்கும் இடத்திலிருந்து முடியும் இடம் வரை ரோட்டின் மையப் பகுதியில் தடுப்பு ஏற்படுத்தியுள்ளனர்.இந்த இடங்களில் விதிகளை மீறி முந்திச் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.