ADDED : ஆக 12, 2025 05:53 AM
சிவகங்கை : சிவகங்கை மாவட்ட காவல்துறையில் கழிவு செய்யப்பட்ட 13 நான்கு சக்கர வாகனம், 6 டூவீலர் உட்பட 19 வாகனங்களை பொது ஏலத்தில் ஏலமிட எஸ்.பி., சிவ பிரசாத் உத்தரவிட்டுள்ளார்.
ஏலம் ஆக. 21 அன்று காலை 10:00 மணிக்கு சிவகங்கை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற உள்ளது.
ஏலத்திற்கான வாக னங்கள் மாவட்ட ஆயுதப் படை மைதானத்தில் ஆக.21 காலை 8:00 மணி முதல் ஏலம் நடைபெறும் நேரம் வரை பார்வைக்காக வைக்கப்படும்.
ஏலம் எடுக்க விருப்ப முள்ளவர்கள் அன்று காலை 6:00 முதல் 10:00 வரை ரூ.1000 முன் வைப்பு தொகை செலுத்தி ஏலம் எடுக்க பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
ஏலம் எடுத்தவர்கள் ஏலம் எடுத்த வாகனங் களுக்கு ஏலத்தொகை மற்றும் ஜிஎஸ்டி விற்பனை வரியுடன் சேர்த்து அன்றே செலுத்திட வேண்டும். ஜிஎஸ்டி கணக்கு வைத் திருப்பவர்கள் மட்டும் ஏலத்தில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவர்.

