ADDED : நவ 02, 2025 06:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: மானாமதுரை அருகே முத்தனேந்தலில் அரசு பஸ் மோதி போலீஸ்காரர் ஒருவர் பலியானார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வண்டல் நகரைச் சேர்ந்த முருகன் மகன் செல்வகுமார் 28, இவர் மதுரை 6வது பட்டாலியனில் போலீசாக வேலை பார்த்து வருகிறார்.
நேற்று மானாமதுரையில் உள்ள உறவினர்கள் வீட்டு விசேஷத்திற்கு சென்று விட்டு டூவீலரில் மானாமதுரையில் இருந்து திருப்புவனம் சென்றார்.
மாலை 5:00 மணிக்கு முத்தனேந்தல் பஸ் ஸ்டாப் அருகே பின்னால் வந்த அரசு பஸ் மோதியதில் பலியானார். மானாமதுரை போலீசார் விசாரிக்கின்றனர். செல்வகுமாருக்கு திருமணமாகி மனைவியும்,ஒரு மாத பெண் குழந்தை ஒன்றும் உள்ளது.

