/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கல்குவாரி அனுமதியை ரத்து செய்ய கிராமசபையில் மீண்டும் தீர்மானம்
/
கல்குவாரி அனுமதியை ரத்து செய்ய கிராமசபையில் மீண்டும் தீர்மானம்
கல்குவாரி அனுமதியை ரத்து செய்ய கிராமசபையில் மீண்டும் தீர்மானம்
கல்குவாரி அனுமதியை ரத்து செய்ய கிராமசபையில் மீண்டும் தீர்மானம்
ADDED : நவ 02, 2025 06:07 AM
சிங்கம்புணரி: சிங்கம்புணரி ஒன்றியத்தில் எஸ்.மாம்பட்டி ஊராட்சி தும்பைப்பட்டியில் தனியாருக்கு சொந்தமான கிரானைட் கல் குவாரி செயல்படுகிறது.
விவசாயம், நிலத்தடி நீர் பாதிக்கும் அபாயம் இருப்பதாக கூறி இக்குவாரியை நிரந்தரமாக மூட வலியுறுத்தி எஸ்.மாம்பட்டி, சுற்றுவட்டார கிராம மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஏற்கனவே நடந்து முடிந்த இரண்டு கிராம சபைகளிலும், இக்குவாரிக்கான அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தி கிராமத்தினர் தீர்மானம் நிறைவேற்றினர். இந்நிலையில் நேற்று எஸ்.மாம்பட்டியில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு நடந்த கிராம சபை கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அப்போது, தும்பைப்பட்டியில் இயங்கி வரும் தனியார் கல்குவாரிக்கான அனுமதியை நிரந்தரமாக ரத்து செய்ய வலியுறுத்தி கிராம மக்கள் சார்பில் 3 வது முறையாக தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது.