/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அனுமதி இல்லாமல் மண் அள்ளியவர் கைது
/
அனுமதி இல்லாமல் மண் அள்ளியவர் கைது
ADDED : நவ 02, 2025 06:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை அருகே கீழக்கண்டனி வி.ஏ.ஓ., புரோஸ்கான் 35. இவருக்கு மேலவெள்ளஞ்சி கண்மாயில் அரசு அனுமதி இல்லாமல் சிலர் சவடு மண் அள்ளுவதாக தகவல் கிடைத்தது.
புரோஸ்கானும் கிராம உதவியாளரும் மேலவெள்ளஞ்சி கண்மாய்க்கு ஆய்வுக்கு சென்றனர். கண்மாயில் சிலர் அரசு அனுமதி இல்லாமல் இயந்திரங்களை கொண்டு லாரியில் மண் அள்ளியுள்ளனர்.
வி.ஏ.ஓ., புரோஸ்கான் நகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். எஸ்.ஐ., செல்வபிரபு தலைமையிலான போலீசார் லாரி டிரைவர் விஜிகுமாரை 31 கைது செய்து 4 யூனிட் மணலுடன் லாரியை பறிமுதல் செய்தனர்.

