/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புவனம் கடைகளில் பாலிதீன் பைகள் பறிமுதல்
/
திருப்புவனம் கடைகளில் பாலிதீன் பைகள் பறிமுதல்
ADDED : ஆக 25, 2025 05:50 AM
திருப்புவனம் : திருப்புவனத்தில் கடைகள் உள்ளிட்டவற்றில் துாய்மை ஆய்வாளர் பாண்டியன் தலைமையில் பேரூராட்சி ஊழியர்கள் தடைசெய்யப்பட்ட பாலிதீன் பைகளை பறிமுதல் செய்தனர்.
திருப்புவனத்தில் அனைத்து கடைகளிலும் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகளை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் இப்பேரூராட்சியில் தினமும் 4 டன் குப்பைகள் சேகரிப்பில், 2 டன் வரை பாலிதீன் பைகளே இடம் பெறுகின்றன. இவற்றை அழிக்க முடியாமல் துாய்மை பணியாளர்கள் சிரமம் அடைகின்றனர். இவற்றை பயன்படுத்த தடை உள்ள போதும் தடையை மீறி பாலித்தீன் பைகள் புழக்கம் அதிகரித்துள்ளன. நேற்று பேரூராட்சி துாய்மை ஊழியர்கள் அனைத்து கடைகளிலும் சோதனையிட்டு தடை செய்யப்பட்ட 15 கிலோ பாலித்தீன் பைகளை பறிமுதல் செய்தனர்.