/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காப்புக்காடுகளில் பாலிதீன் ஒழிப்பு இயக்கம் துவக்கம்
/
காப்புக்காடுகளில் பாலிதீன் ஒழிப்பு இயக்கம் துவக்கம்
காப்புக்காடுகளில் பாலிதீன் ஒழிப்பு இயக்கம் துவக்கம்
காப்புக்காடுகளில் பாலிதீன் ஒழிப்பு இயக்கம் துவக்கம்
ADDED : ஜூலை 20, 2025 11:18 PM
திருப்புத்தூர்: தேசிய வனத்துறை அறிவுறுத்தலின்படி திருப்புத்தூர் வனச்சரக காப்புக் காடுகளில் பாலிதீன் ஒழிப்பு இயக்கம் துவக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக ஏரியூர் காப்புக் காட்டில் பாலிதீன்கள் அப்புறப்படுத்தவும், காட்டைச் சுத்தப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஸ்டெப் தொண்டு நிறுவனம், ஆ.பி.சீ.அ. கல்லூரி மாணவர்கள், ஏரியூர் ஊராட்சி மக்கள், வனத்துறை பணியாளர்கள் பாலிதீன் சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அதில் 227 கிலோ பாலிதீன் குப்பைகள் சேகரிக்கப்பட்டது. அதை மறு சுழற்சிக்காக ஊராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர். மாவட்ட வன அலுவலர் பிரபா, உதவி வன பாதுகாப்பு அலுவலர் மார்க்கண்டன் பங்கேற்றனர்.
பாலிதீனால் காடுகள் மாசுபடுவதுடன் வன உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன. இதனால் மாணவர்கள், உள்ளூர் மக்களிடம் காடுகளில் தூய்மைக்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பிற பகுதிகளில் உள்ள காப்புக் காடுகளிலும் பாலிதீன் ஒழிப்பு பணி நடைமுறைப்படுத்த உள்ளனர்.