/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரை வாரச்சந்தையில் மாதுளை ஒரு கிலோ ரூ.100
/
மானாமதுரை வாரச்சந்தையில் மாதுளை ஒரு கிலோ ரூ.100
ADDED : ஜன 24, 2025 04:40 AM

மானாமதுரை: மானாமதுரை வாரச்சந்தையில் மினி மாதுளை ஒரு கிலோ ரூபாய் 100, சின்ன வெங்காயம் ஒரு கிலோ 100,உருளை ஒரு கிலோ ரூ.70க்கு விற்பனையானது.
மானாமதுரை வாரச்சந்தையில் மதுரை, திருப்புவனம், திருப்பாச்சேத்தி, இளையான்குடி, சிவகங்கை,பரமக்குடி உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலிருந்து 300க்கும் மேற்பட்ட வியாபாரிகள் வந்து பல்வேறு பொருட்களை வியாபாரம் செய்கின்றனர்.
நேற்று நடைபெற்ற சந்தையில்  மாதுளை ஒரு கிலோ ரூ.180லிருந்து ரூ.240 வரை விற்பனை செய்த நிலையில் மினி மாதுளை ஒரு கிலோ ரூ. 100க்கு விற்பனையானது.
சின்ன வெங்காயம் விலை  அதிகரித்து ஒரு கிலோ ரூ.100க்கும்,தக்காளி 4 கிலோ ரூ.100, பெரிய வெங்காயம் ரூ.50, கத்தரிக்காய் ரூ.80,கேரட், முள்ளங்கி, சவ்சவ் ரூ.60,பச்சை மிளகாய் ரூ.60, பட்டர் பீன்ஸ், சோயா பீன்ஸ் ரூ.140, பச்சை மொச்சை ரூ.80, சின்னப்பாகற்காய் ரூ.200, உருளைக்கிழங்கு ரூ.70க்கு விற்கப்பட்டது.

