நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்துார்: திருப்புத்துார் நேஷனல் அகாடமி சமுதாயக் கல்லுாரியில் பொங்கல் விழாவை வெளிநாட்டினர் பங்கேற்புடன் மாணவ,மாணவியர் கொண்டாடினர்.
கல்லூரி நிறுவனர் காசிநாதன், முதல்வர் சுரேஷ் பிரபாகர் ஆகியோர் முன்னிலையில் கரகாட்டம், ஒயிலாட்டம், பொம்மலாட்டத்தோடு வரவேற்பு அளிக்கப்பட்டது. பொங்கல் விழா குறித்து விளக்கப்பட்டது. மாணவ,மாணவியர் பங்கேற்ற நாட்டுப்புற ஆடல்,பாடல்,கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

