ADDED : ஜன 15, 2024 11:06 PM
தேவகோட்டை : தேவகோட்டை நகர் போலீஸ் ஸ்டேஷன், மற்றும் போலீசார் குடியிருப்பிலும் டி.எஸ்.பி.பார்த்திபன் தலைமையில் பொங்கல் விழா நடந்தது. இன்ஸ்பெக்டர் அந்தோணி செல்லத்துரை முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் எஸ்.ஐ.க்கள், போலீசார் ஸ்டேஷன் முன்பு பொங்கல் வைத்து வழிபட்டனர். காவலர் குடியிருப்பில் நடந்த பொங்கல் விழாவில் தேவகோட்டை துணை கோட்டத்தில் உள்ள இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.க்கள், சிறப்பு எஸ்.ஐ.,க்கள், போலீசார் குடும்பத்தினருடன் பங்கேற்றனர்.
தீயணைப்பு நிலைய அலுவலகத்தில் அலுவலர் ரவிமணி தலைமையில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது.
* டி.பிரிட்டோ மேல்நிலை பள்ளியில் பொங்கல் விழா நடந்தது. ஆசிரியர் மைக்கேல் குரூஸ் வரவேற்றார். பள்ளி அதிபர் பாதிரியார் பாபு வின்சென்ட் ராஜா, தாளாளர் குழந்தைராஜ், தலைமையாசிரியர் ஆரோக்கியசாமி முன்னிலை வகித்தனர். ஓ.சிறுவயல் பள்ளி ஆசிரியர் பாரதிதாசன் பேசினார். மாணவர்களின் சிலம்பாட்ட நிகழ்ச்சி நடந்தது. உடற்கல்வி ஆசிரியர் அருளானந்தம் நன்றி கூறினார். ஆசிரியர் அன்பரசன் தொகுத்து வழங்கினார்.